
புதுடெல்லி: நவம்பர் 4-
‘டிஜிட்டல் முறையில் கைது செய்வதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடிகளை, இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வயதானவர்களே இந்த மோசடிக்கு குறிவைக்கப்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றும், உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுதும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருகின்றன. அச்சடிக்கப்பட்ட பணத்தின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
அதே வேளையில், டிஜிட்டல் முறையில் நடக்கும் பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன.
குறிப்பாக, மொபைல் போனில் ‘வீடியோ கால்’ செய்து, சி.பி.ஐ., உள்ளிட்ட விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் போல பேசி, டிஜிட்டல் முறையில் அரெஸ்ட் செய்து விட்டதாக மிரட்டுகின்றனர்.
இந்த மிரட்டல்களுக்கு அஞ்சும் அப்பாவி மக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் மோசடியாக பணம் பறிக்கப்படுகிறது. இந்த மோசடி, ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த மோசடி தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.
நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறது. மிகுந்த அதிர்ச்சி அளிக்கும் மோசடியாகவும் இருக்கிறது.

















