டிஜிபி விவகாரம் தமிழக அரசு விளக்கம்

புதுடெல்லி: செப்டம்பர் 9-
தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பிய உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், நிரந்தர டிஜிபியை விரைந்து நியமிக்க உரிய நடவடிக்​கைகளை எடுக்க யுபிஎஸ்சி மற்​றும் தமிழக அரசுக்கு உத்​தர​வி்ட்​டுள்​ளனர்.இதுதொடர்​பாக மனித உரிமை​கள் செயற்​பாட்​டாள​ரான மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஹென்றி திபேன் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த அவம​திப்பு வழக்​கில், தமிழகத்​தில் டிஜிபி​யாக பதவிவகித்த சங்​கர் ஜிவாலின் பதவிக்​காலம் முடிவடைந்து விட்டது. அவரது பதவிக்​காலம் முடிவடைவதற்கு 3 மாதங்​களுக்கு முன்​பாகவே அடுத்த டிஜிபிக்​கான பரிந்​துரைப் பட்​டியலை தமிழக அரசு யுபிஎஸ்​சி-க்கு அனுப்​பி​யிருக்க வேண்​டும்.
ஆனால் தற்​போது தமிழக அரசு தற்​காலிக பொறுப்பு டிஜிபி​யாக வெங்​கட​ராமனை நியமித்​துள்​ளது. இவ்​வாறு தற்​காலிக டிஜிபியை நியமிக்​கக்​கூ​டாது என ஏற்​கெனவே பிர​காஷ் சிங் வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. அந்த உத்​தரவை தமிழக அரசு மதித்து நடக்​க​வில்லை என்​ப​தால், தமிழகத்​தில் தற்​காலிக டிஜிபியை நியமித்​துள்ள தமிழக அரசின் தலைமை செயலருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு சட்​டத்​தில் நடவடிக்கை எடுக்க வேண்​டும் எனக்​கோரி​யிருந்​தார்.
இந்த அவம​தி்ப்பு வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், தமிழகத்​தில் தற்​காலிக பொறுப்பு டிஜிபியை நியமித்​தது ஏன் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்​பினர்