
வாஷிங்டன்: ஆகஸ்ட் 19
விரைவில் உக்ரைனில் அமைதி திரும்பும் என உக்ரைன் அதிபர் ஜெலஸ்கியிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதையடுத்து ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் டிரம்ப்பை சந்தித்து பேசினர்.ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்பை இன்று (ஆக.18) , வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்..உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க அதிபர் டிரம்ப், அலாஸ்கா நகரில் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்துப் பேசினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். இதற்கு முன்னர் கடந்த பிப்ரவரியில் இருவரும் சந்தித்து பேசினர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போதும் அதுபோல் நடக்காமல் இருக்க ஜெலன்ஸ்கி உடன் சேர்ந்து, டிரம்ப்பை சந்திக்க உள்ளதாக பிரிட்டன் பிரதமர், பிரான்ஸ் அதிபர், ஜெர்மனி அதிபர் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் அறிவித்து இருந்தனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் டிரம்ப்பை ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.அப்போது புடின் தெரிவித்த விஷயங்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக ஜெலன்ஸ்கியிடம் டிரம்ப் தெரிவித்தார்.