டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 – வெற்றி நெருக்கடியில் இந்திய அணி!

சென்னை: பிப்ரவரி 26-
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி தனது 2-வது ஆட்​டத்​தில் ஜிம்​பாப்வே அணி​யுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறுகிறது.சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி சூப்பர் 8 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்க அணி​யிடம் 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. அந்த ஆட்​டத்​தில் 88 ரன்​கள் இலக்கை துரத்​திய இந்​திய அணி 18.5 ஓவர்​களில் 111 ரன்களுக்கு சுருண்​டிருந்​தது. இந்த தோல்​வி​யால் இந்​திய அணி​யின் நிகர ரன் ரேட் -3.800 ஆக உள்​ளது.இதனால் அரை இறு​திக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை பெற வேண்​டு​மா​னால் இந்​திய அணி இன்றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 2 ஆட்​டங்​களி​லும்
பெரிய அளவி​லான வெற்​றிகளை குவித்​தாக வேண்​டும் என்ற நெருக்​கடி​யில் உள்​ளது. டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்மா​வின் மோச​மான பார்ம் அணி​யின் செயல் திறனை வெகு​வாக பாதித்துள்​ளது.அவர், 4 ஆட்​டங்​களில் 3-ல் டக் அவுட் ஆகி​யிருந்​தார். தென் ஆப்பிரிக்கா​வுக்கு எதி​ராக 15 ரன்​கள் சேர்த்​திருந்​தார். நடப்பு தொடரில் அபிஷேக் சர்​மாவுடன் சராசரி 3.75 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 75 ஆகவும் உள்​ளது. மந்​த​மான ஆடுகளம், பவர்​பிளே​வில் சுழற்​பந்து வீச்​சாளர்​கள் வேகத்தை குறைத்து வீசுவது உள்​ளிட்​டவை அபிஷேக் சர்மாவுக்கு கடும் சவால்​களை அளித்து வரு​கின்​றன.
லீக் சுற்​றில் இஷான் கிஷன் அதிரடி​யாக விளை​யாடி ரன்கள் குவித்​த​தால் அபிஷேக் சர்மா விரை​விலேயே ஆட்டமிழந்த போதி​லும் அது பெரிய அளவில் அணி​யின் செயல் திறன் தாக்​கத்தை ஏற்​படுத்​தாமல் இருந்​தது.
ஆனால் சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் இஷான் கிஷன் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது நெருக்​கடியை உரு​வாக்​கியது.
3-வது வீரராக களமிறங்கி வரும் திலக் வர்​மா​விடம் இருந்​தும் தொடர்ச்​சி​யாக பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்பட​வில்​லை.பந்​துகளுக்கு நிக​ராக மட்​டுமே ரன்​கள் சேர்க்​கும் அவர், சூழ்​நிலைக்கு தகுந்​த​படி தாக்​குதல் ஆட்​டம் மேற்கொள்ளாததும் பாதிப்பை ஏற்​படுத்தி உள்​ளது. நடப்பு தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருக்​கிறது. இது நவீன​கால டி20 கிரிக்​கெட்​டில் பவர்​பிளே​வில் மிக குறைந்த ஸ்டிரைக் ரேட்​டாக பார்க்​கப்​படு​கிறது.