Home மாவட்டங்கள் பெங்களூர் டெம்போ டிராவலர்க விழ்ந்தது, குழந்தை உட்பட 12 பேர் படுகாயம்

டெம்போ டிராவலர்க விழ்ந்தது, குழந்தை உட்பட 12 பேர் படுகாயம்

கொப்பால்: மே 23 –
கர்நாடக மாநிலம் கொப்பால் நகரின் புறநகர்ப் பகுதியான சுக்கனக்கல் அருகே, சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் (TT) வாகனத்தின் டயர் திடீரென வெடித்ததில், குழந்தை உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 2 வயது குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தில் சிக்கிய வாகனம் ஹைதராபாத்தில் இருந்து கோவாவுக்குச் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. கொப்பல் நகர் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.