டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் கலைந்து போன குடும்பக் கனவுகள்

புதுடெல்லி: நவம்பர் 12- டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் இறந்த 5 ஆண்​களைச் சேர்ந்த 5 குடும்​பங்​களின் எதிர்​காலக் கனவு​கள் கலைந்து போய்​விட்​டது. இறந்​தவர்​களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்​கஜ் சைனி​யும்​(22) ஒரு​வர். இவர் சாந்​தினி சவுக் பகு​தி​யில் ஒரு பயணியை இறக்​கி​விட்டு வரும்​போது இந்த குண்​டு​வெடிப்​பில் சிக்கி உயி​ரிழந்​தார். பங்​கஜ் சைனி​யின் தந்தை இதுகுறித்து கூறும்​போது, “பயணியை இறக்​கி​விட்டு பங்​கஜ் தனது காரில் வரும்​போது​தான் இந்த குண்​டு​வெடிப்பு நடந்​துள்​ளது. எங்​கள் குடும்​பத்​தின் ஒரே நம்​பிக்கை பங்​கஜ்​தான். அவரை இழந்து எங்​களால் இருக்​கவே முடி​யாது. இந்த சம்​பவத்​துக்கு நீதி கிடைக்​கவேண்​டும்’’ என்​றார்.
டெல்லி போக்​கு​வரத்​துக் கழகத்​தில் பேருந்து நடத்​துந​ராக இருந்த அசோக் குமார் என்​பவரும் இதில் உயி​ரிழந்​தார். இதுகுறித்து அசோக் குமாரின் உறவினர் பப்பு என்​பவர் கூறும்​போது, “8 பேர் கொண்ட குடும்​பத்​தில் இவர் மட்​டுமே ஊதி​யம் ஈட்​டு​கிறார். இனி அந்​தக் குடும்​பத்​துக்கு யார்​தான் பாது​காப்​பு? தனது குடும்ப பாரத்தை தனி​யாக சுமந்​தவர் அசோக் குமார். இவரது தாயார் சோம்​வ​தி, தனது மூத்த மகனுடன் சொந்த ஊரில் வசிக்​கிறார். ஊதி​யம் போதாத​தால் இரவு நேரத்​தில் செக்​யூரிட்​டி​யாக​வும் பணி​யாற்றி வந்​தார் அசோக் குமார். அவர்​களது எதிர்​காலம் இனி கேள்விக்​குறி​தான்’’ என்​றார்.
22 வயதான நோமன் என்​பவரும் இந்த குண்​டு​வெடிப்​பில் தனது உயிரை பறி​கொடுத்​துள்​ளார். இவர் சாந்​தினி சவுக் பகு​தி​யில் அழகு சாதனப் பொருட்​களை தனது கடைக்​காக வாங்க வந்​த​போது​தான் குண்​டு​வெடிப்​பில் சிக்கி உயி​ரிழந்​தார். நோமனின் மாமா ஃபர்​ஹான் கூறும்​போது, “நோமனின் உயி​ரிழப்பு அவரது குடும்​பத்​தைச் சிதைத்​து​விட்​டது. எங்​கள் மகனை இழந்​து​விட்​டோம். அவர் கடின உழைப்​பாளி. இந்த விஷ​யத்​தில் அரசு ஏதாவது செய்​ய​வேண்​டும். ஆனால், இந்த விஷ​யத்​தில் நடவடிக்கை எடுக்க அவர்​களுக்கு தைரி​யம் இல்​லை’’ என்​றார்