தங்கம் விலை பவுனுக்குரூ.960 சரிவு: இன்றைய நிலவரம்

சென்னை: பிப்ரவரி 16-
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.16) பவனுக்கு ரூ.960 என விலை குறைந்தது. அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.15,000 சரிந்துள்ளது.
சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த வாரம் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று (பிப்.16) காலை சென்​னை​யில் 22 காரட் ஆபரணத் தங்​கத்​தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,340-க்கு விற்​பனை ஆகிறது. பவுனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,14,720-க்கு விற்பனை ஆகிறது.இதேபோல 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.1,048 என குறைந்து, ஒரு பவுன் ரூ.1,25,152-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்​கம் பவுனுக்கு ரூ.784 என குறைந்து, ஒரு பவுன் ரூ.93,864-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,65,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் விலை கிராமுக்கு ரூ.18 என விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,988-க்கு விற்பனையாகிறது.