தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 உயர்வு

சென்னை: பிப்ரவரி 23-
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.23) பவுனுக்கு ரூ.1,440 என உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 ஏற்றம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வரு​கிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றமும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரியும் இதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.இந்நிலையில், இன்று (பிப்.23) தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,860-க்கும், பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,18,880-க்கும் விற்பனை ஆகிறது.இதேபோல 24 காரட் சுத்த தங்​கம் பவுனுக்கு ரூ.1,568 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,29,688 -க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்​கம் பவுனுக்கு ரூ.1,280 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,01,760-க்கு விற்பனை ஆகிறது.வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300-க்​கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.3,00,000-க்​கும் சந்தையில் விற்பனை ஆகிறது. பிளாட்டினம் கிராமுக்கு ரூ.16 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,307-க்கு விற்பனை ஆகிறது.