தங்கம் விலை பவுனுக்கு ரூ.7600 சரிவு; வெள்ளி ரூ.55 குறைவு

சென்னை: ஜனவரி 31
சென்னையில் இன்று (ஜன.31) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.7600 குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.55 குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
சர்​வ​தேச பொருளா​தாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சமீப காலமாக விண்ணை முட்டும் அளவுக்கு தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வந்தது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை பவுனுக்கு காலையில் ரூ.4,800 குறைந்தது, மாலையில் மேலும் ரூ.2,800 குறைந்து, மொத்தமாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,26,800 க்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று (ஜன.31) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.7600 சரிந்துள்ளது.
அதன்படி, இன்று கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1,19.200-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,50,000-க்கும் விற்பனையாகிறது.
இந்நிலையில், இந்த வகை முதலீடுகள் சற்றே குறைந்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.