தங்கம், வெள்ளி விலையை உயர்த்தும் அமெரிக்கா

உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பிறகு நவம்பர் மாதத்தில் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இத்துடன் தங்கத்தின் விலை உயர்வு நின்றுவிட்டது என அனைவரும் கருதினர். ஆனால் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வேகமாக உயர தொடங்கி இருக்கிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது.

திங்கட்கிழமையான இன்று . அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் பார்க்கும் போது இது 3, 93,265 ரூபாய் ஆகும். ஒரு அவுன்ஸ் என்பது 28.34 95 கிராம் அளவுக்கு சமமாகும். அப்படி பார்க்கும்போது உலக சந்தையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13,868 ரூபாய் என வரலாற்று உச்சத்தை தொட்டு இருக்கிறது. சர்வதேச சந்தையில் ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து இன்று வரை மட்டும் 67% தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 69 டாலர்களாக இருக்கிறது. 69 டாலர்கள் என்றால் இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 6,187 ரூபாய் ஆகும். அப்படி என்றால் உலக சந்தையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 218 ரூபாயாக இருக்கிறது . 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக இந்த ஆண்டில் வெள்ளியின் விலை இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர் .