தங்கவயல் தமிழ் சங்கத்தில் இதழியல் இமயம் டாக்டர் பா.சு.மணி படம் திறப்பு

தங்கவயல்: ஜூன் 2-
தங்கவயல் தமிழ் சங்கத்தில் இதழியல் இமயம் டாக்டர் பா.சு. மணி அவர்களின் திருவுருவப்படம் திறக்கப்படுகிறது
தங்கவயல் தமிழ்ச் சங்கம் சார்பில் டாக்டர் கலைஞரின்101-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் தினச்சுடர் நாளிதழ் நிறுவனர் டாக்டர் பா.சு.மணி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி, தங்கவயல் தமிழ்ச்சங்க தலைவர்
சு. கலையரசன் தலைமையில் நாளை 3ம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. டாக்டர் கலைஞர் மற்றும் பா.சு.மணி திருவருவ பட படங்களுக்கு மலர் மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தப்படுகிறது.
நிகழ்ச்சியில் கே. ஆனந்த கிருஷ்ணன்,பேராசிரியர் சி. கிருஷ்ணகுமார்,வழக்கறிஞர் ஆர்.ஜோதிபாசு,தங்க செங்குட்டுவன், ஏ.வி.மதியழகன், கமல் முனிசாமி,ஆர்.வி. குமார், வி. சி.நட்ராஜ் ,டாக்டர் ஆர். பிரபுராம்,
தீபம் சுப்ரமணியம், அப்பு ஜெயகுமார்,கலை அன்பரசன்,திருமுருகன், கருணாகரன்,ஆர்மி முருகன், கே.பிரபு,சூர்யா,அனீஸ், உதய்,நவீன்,ஆகியோர்கள் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.