தசரா – மைசூர் ஜொலிக்கிறது

பெங்களூரு: செப். 26-
மைசூரு தசரா விழாவையொட்டி அரண்​மனை, சாமுண்டி மலை, கிருஷ்ண​ராஜ சாகர் அணை உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ள​தால் மைசூரு மாநகரம் விழாக்​கோலம் பூண்​டுள்​ளது. கி.பி. 1610ம் ஆண்டு மைசூருவை ஆண்ட நால்​வடி கிருஷ்ண​ராஜ உடை​யார் மன்​னர், போரில் வென்​றதை முன்​னிட்டு விஜயதசமி காலத்​தில் தசரா விழாவை 10 நாட்​கள் கொண்​டாட தொடங்​கி​னார். 1947-ல் நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு, கர்​நாடக அரசின் சார்​பில் தசரா விழா ஆண்​டு​தோறும் கொண்​டாடப்​படு​கிறது.தற்​போது 415-வது ஆண்​டாக தசரா விழாவை புக்​கர் பரிசு வென்ற கன்னட எழுத்​தாளர் பானு முஸ்​தாக் கடந்த திங்​கட்​கிழமை மைசூரு சாமுண்​டீஸ்​வரி அம்​மனுக்கு சிறப்பு பூஜை செய்து தொடங்கி வைத்​தார். அக்​டோபர் 2ம் தேதி வரை 10 நாட்​கள் நடை​பெறும் தசரா விழா​வில் உணவு திரு​விழா, திரைப்பட திரு​விழா, கிராமிய விழா, மலர்க் கண்​காட்​சி, பொருட்​காட்​சி, இசைக் கச்​சேரி, இலக்​கிய விழா மற்​றும் கன்னட கலை பண்​பாட்டை பறை சாற்​றும் பல்​வேறு நிகழ்ச்​சிகளுக்​கும் ஏற்​பாடு செய்யப்பட்டுள்ளது.தசரா விழாவையொட்டி மைசூரு அரண்​மனை, சாமுண்​டீஸ்​வரி கோயில், கிருஷ்ண​ராஜ சாகர் அணை, ரயில் நிலை​யம், மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் உள்​ளிட்​டவை வண்ண மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன‌. முக்​கிய சாலைகள், பூங்​காக்​கள் உட்பட 100 கி.மீ. தூரத்​துக்கு மின்​விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்​டுள்​ளன. இதனால் மைசூரு மாநகரமே விழாக்​கோலம் பூண்டுள்ள‌து.