Home விளையாட்டு தடகளத்தில் தமிழகம் சாம்பியன்

தடகளத்தில் தமிழகம் சாம்பியன்

சென்னை, ஜூன் 30-ஒடிசா மாநிலம் புவனேஸ்​வரில் கடந்த 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாநிலங்​களுக்கு இடையே​யான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடை​பெற்​றது. இதில் தமிழ்​நாடு ஒட்​டுமொத்த சாம்​பியன் பட்​டம் வென்​றுள்​ளது. இந்த தொடரில் தமிழகத்​தில் இருந்து ஆடவர் பிரி​வில் 41 பேரும், மகளிர் பிரி​வில் 36 பேரும் பங்​கேற்​றிருந்​தனர். இதில் 9 தங்​கம், 9 வெள்​ளி, 2 வெண்​கலம் வென்ற தமிழகம் 138 புள்​ளி​களை குவித்து ஒட்​டுமொத்த சாம்​பியன் பட்​டம் வென்​றது. இந்​தத் தொடரில் தமிழ்​நாட்​டின் முன்​னணி வீரர்​களான டி.கே.​விஷால் (400 மீட்​டர்), வித்யா ராம்​ராஜ் (400 மீட்​டர் தடை ஓட்​டம்), பிர​வீன் சித்​ர​வேல் (மும்​முறை தாண்​டு​தல்) ஆகியோர் தங்​கப் பதக்​கம் வென்று அசத்​தி​யிருந்​தனர்​.