
பெங்களூரு: ஜூன் 12-
தனியார் நிறுவனங்களாக இருந்தாலும் சரி, பள்ளிக்கூடங்களாக இருந்தாலும் சரி மாற்றுத்திறனாளிகள் சட்ட விதிகளைப் பின்தொடர்ந்தே ஆக வேண்டும் என்று பெங்களூரு உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பர்னாலி ராவத் என்ற மாற்றுத்திறனாளி ஆசிரியை பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பரிகாரமாக,10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கர்நாடக மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் அந்தப் பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, “நாங்கள் தனியார் பள்ளி, மாற்றுத்திறனாளிகள் ஆணையம் எங்களுக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை” என்று கூறி பள்ளி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், பள்ளி நிர்வாகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்து, அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையம் பிறப்பித்த உத்தரவு முற்றிலும் செல்லுபடியாகும். பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு மருத்துவச் செலவே 46 லட்ச ரூபாய்க்கும் மேல் ஆகியுள்ளது. அப்படிப் பார்க்கும்போது, ஆணையம் விதித்த 10 லட்ச ரூபாய் என்பது தண்டனை அபராதம் அல்ல; மிகக் குறைவான, நியாயமான இழப்பீடுதான் என்று கூறியது.
பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு ஆதரவாக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு விபரம் வருமாறு.
ஆசிரியை பர்னாலி ராவத்தை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்தி, அதற்கான பணி ஆணையை எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும்.
எளிதாகச் சென்று வரும் வகையில், தரைத்தளத்திலேயே (அவருக்கு வகுப்பறை ஒதுக்கப்பட வேண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த கழிவறை வசதி செய்து தரப்பட வேண்டும்.
ஆசிரியைக்கு மாதம் 15,000 ரூபாய் வாகனப் படியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேர வேலைக்குப் பிறகும், 15 நிமிடங்கள் அவர் ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும்.
உடல்நிலை சரியில்லாமல் பள்ளிக்கு வர முடியாத நாள்களில், வீட்டில் இருந்தபடியே ‘ஆன்லைன்’ மூலம் பாடம் நடத்தப் பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் ‘
இந்த வழக்கின் மூலம் ஒட்டுமொத்த கர்நாடக மாநில அரசுக்கும் நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது:


















