
சென்னை: ஆக. 23:
சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்யவலியுறுத்தியதோடு, தமிழக அரசுக்கு நாங்கள் வேண்டுமா? அல்லது அதிகாரிகள் வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது.கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பேசுகையில், “மாணவர்கள் அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களைக் கண்காணிக்க வேண்டும் எனக்கூறி, தலைமைச் செயலர் தலைமையிலான குழு சுற்றறிக்கை அனுப்புகிறது.
இது தெரியாமல் நடந்துவிட்டது என்கிறார்கள். அதை எப்படி எடுத்துக்கொள்வது? அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகிறார்களா? அவ்வளவு விவரம் இல்லாதவரை, தவறாக சுற்றறிக்கை விடுபவரை எதற்காக தலைமைச் செயலராக வைத் திருக்க வேண்டும்?இவ்விவகாரத்தில் உயர்கல்வி ஆணையருக்கு விளக்கம்கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது போல இதற்கு மூலகாரணமாக இருந்த சாய்குமார் மீதும் அரசு முறைப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.தமிழக அரசின் கட்டுப்பாட்டில், அதிகாரிகள் செயல்படுகிறார்களா? அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழக அரசு இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு முதல்வர் தான் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும்.












