தமிழக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: அக். 16-
தமிழ்​நாடு உடற்​கல்​வி​யியல், விளை​யாட்டு பல்​கலைக்​கழக மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு எதி​ராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு மனு தாக்​கல் செய்​துள்​ளது.
இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.​வில்​சன், வழக்​கறிஞர் டி. ஹரீஷ் குமார் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறியிருப்ப​தாவது: தமிழ்​நாடு உடற்​கல்​வி​யியல், விளை​யாட்டு பல்​கலைக்​கழகத்​தின் துணைவேந்​தரை நியமிப்​பது மற்​றும் நீக்​கு​வதற்​கான அதி​காரத்தை அரசுக்கு வழங்​கும் சட்​டத் திருத்த மசோதா கடந்த ஏப்​ரல் 29-ம் தேதி தமிழக சட்டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த மசோ​தாவை ஆளுநரின் ஒப்​புதலுக்கு தமிழக அரசு மே 5-ம் தேதி அனுப்பிவைத்தது.
மாநில அரசின் ஆலோ​சனையை மதிக்​காமல், யுஜிசி விதி​களுக்கு முரணாக இருப்​ப​தாகக் கூறி குடியரசுத் தலை​வரின் பரிசீலனைக்கு இந்த மசோ​தாவை கடந்த ஜூலை 14-ம் தேதி ஆளுநர் அனுப்பி வைத்​துள்​ளார். தொழில்​நுட்ப கல்​வி, மருத்​து​வக் கல்​வி, பல்​கலைக்​கழகங்​கள் ஆகியவை பொதுப் பட்​டியலில் உள்​ள​தால், அந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கும் அதி​காரம் ஆளுநருக்கு உள்​ளது.
தவிர, அந்த பல்​கலைக்​கழகத்​தின் 2004-ம் ஆண்டுசட்​டத்​துக்கு குடியரசுத் தலை​வர் கடந்த 2005 ஆகஸ்ட் 4-ம் தேதி ஒப்​புதல் அளித்துள்​ளார். தற்​போதைய சட்​டத் திருத்த மசோ​தா​வும் மத்​திய அரசின் சட்​டத்​துடன் முரண்​பட​வில்​லை.
இதுதொடர்​பாக மாநில அமைச்​சரவையின் ஆலோ​சனையை அறிந்த பிறகும், யுஜிசி விதி​களுக்கு முரணாக உள்​ளது என ஆளுநர் கரு​தி​யுள்​ளார். இந்த விவ​காரத்​துக்கு யுஜிசி விதி​கள் பொருந்​தாது. உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களால் முடி​வான சட்​டத்தை மறந்​து​விட்டு, தமிழக அரசின் உண்மையான முயற்​சிகளுக்கு ஆளுநர் முட்​டுக்​கட்டை போட்டு வரு​கிறார். எனவே, மேற்​கண்ட சட்​டத் திருத்த மசோ​தாவை குடியரசுத் தலை​வருக்கு அனுப்பி வைத்​ததும், இதன் மீதான மேற்​படி நடவடிக்​கைகளை​யும் சட்​டத்​துக்கு முரணானது என அறிவிக்க வேண்​டும். அந்த மசோ​தாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்ப யுஜிசிக்கு உத்​தர​விட வேண்​டும். அமைச்​சர​வை​யின் ஆலோ​சனைப்​படி மசோ​தாவை பரீசிலிக்க ஆளுநருக்​கும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படுகிறது.