பெங்களூரு, டிச. 30- தமிழர்கள் கல்வி, பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்று பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் டாக்டர் ராம்பிரகாஷ் மனோகர் ஐஏஎஸ் தெரிவித்தார். கர்நாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு 8 நாட்களும், கடந்தாண்டு 10 நாட்கள் நடைபெற்ற தமிழ் புத்தக திருவிழா வெற்றியுடன் முடிந்தது. அதன் வெற்றியை தொடர்ந்து மூன்றாமாண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா கடந்த 20 ஆம் தேதி 29 இன்று வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது.பெங்களூரு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சாலையில் உள்ள இன்ஸ்டிடூயூட் ஆப் என்ஜினியர்ஸ் வளாகத்தில் நடந்த புத்தக திருவிழாவை கடந்த 20ம் தேதி தொடங்கியது. இதில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் பெங்களூரு குடிநீர் வடிக்கல் வாரிய தலைவருமான டாக்டர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில், ஓய்வு பெற்ற இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் புத்தக திருவிழாயை தொடங்கி வைத்தார். இஸ்ரோ விஞ்ஞானியும் திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க பொதுச்செயலாளருமான வீராணம் சு.முருகன், இந்திய பேனா நண்பர் பேரவை தலைவர் மா.கருண் உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். புத்தக திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட பதிப்பங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். கல்வி, பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பொது அறிவு, அறிவியல், இலக்கியம், இலக்கணம், ஆன்மீகம், புராணம், நாடகம், வரலாற்று சிறப்புமிக்க நாடகங்கள், நாவல்கள், ஓவியம் சிறுவர்களின் அறிவு வளர்ச்சி மற்றும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்தும் வகையிலான புத்தகங்கள் பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். புத்தக திருவிழா நடைபெற்ற நாட்களில் தினந்தோறும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் பங்கேற்ற வினா-விடை போட்டிகள், மொழி திறன் போட்டிகள், நாட்டுபுற கலை போட்டிகள், கவிதை, கட்டுரை போட்டிகள், நடன போட்டிகள் நடைபெற்றது. சமூக முற்போக்கு நாடக அரங்கேற்றம், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள நூல்கள் வெளியிடு, பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம் ஆகியவை நடைபெற்றது. புத்தக திருவிழாவில் சிறந்த நூல்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசும், போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழ் புத்தக திருவிழாவின் இறுதி நாளான நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியை தமிழியக்கத்தின் வட தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி வரவேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு மூத்த ஐஎப்எஸ் அதிகாரியும் கர்நாடக மாநில மூலிகை செடிகள் ஆணைய தலைமை செயல் அதிகாரியுமான முனைவர் எஸ்.வெங்கடேசன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற சுங்கத்துறை இயக்குனர் கோ.மாணிக்கவாசகம், விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல துறைகளில் சாதனைப்படைத்தவர்களுக்கு பெங்களூரு குடிநீர் வழக்கல் மற்றும் வடிக்கல் வாரிய தலைவர் டாக்டர் ராம்பிரசாத் மனோகர் விருது வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ் புத்தகத் திருவிழாவை 10 நாட்கள் நடத்துவது எளிதான காரியமல்ல. முதலாமாண்டு புத்தகத்திருவிழாவை வைக்கும் போது என்ன பெயர் வைப்பது என்று யோசித்தோம். தமிழ் புத்தக் கண்காட்சியாக வைத்தால் அது கண்காட்சியாக மாறிவிடும். புத்தகச் சந்தை என்று வைத்தால் அது சந்தைபோல் ஆகிவிடும். எனவேதான் தமிழ்ப் புத்தகத் திருவிழா என்று பெயர் வைத்தோம். மொழி, இலக்கியம், பண்பாட்டை வளர்க்க வேண்டும் என்பதுதான் இந்த புத்தக திருவிழாவின் நோக்கம். கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் கற்றுத்தரவேண்டும். மற்ற மொழிகளில் உள்ள குழந்தைப் பாடல்கள் எதிர்மறையான கருத்துகளை குறிப்பாக ஆங்கிலத்தில் ரைன் ரைன் கோ அவே என்று பாடுகின்றன. ஆனால் திருக்குறள் உள்ளிட்ட நூல்களில் மழையை வரவேற்பதாக குறள் உள்ளது.இந்த தலைமுறையினருக்கு எதையும் எதிகொள்ளும் துணிச்சல் இல்லை. இதற்கு கல்வி அமைப்பு முறைதான் காரணம். உலகமே எதிர்த்து நின்றாலும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு தமிழர் வரலாற்றை படிக்க வேண்டும். நமது பல வரலாறுகள் புதைக்கப்பட்டுள்ளன. அண்மையில் கம்போடியா நாட்டிற்கு சென்றப்போது அங்கு ஓராயிரம் பழமையான கோயிலை கண்டு பிரமித்து போனேன். அந்த கோவிலை கட்டியவர்கள் சோழர்கள். கடலைத் தாண்டி பல நாடுகளை ஆண்டவர்கள் சோழர்கள். சோழர்கள் பாரம்பரியத்தில் வந்த புலிக்குட்டிகள் நாம் என்பதனை மறக்கக் கூடாது. தமிழர்கள் அனைவரும் கல்வி, பொருளாதாரத்தில் உயர வேண்டும். பொருளாதாரத்தில் உயருவோம். தமிழ் இனத்தில் பிறப்பது மிகப் பெரும் பேறு ஆகும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்ப் புத்தகத்திருவிழாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வோம் என்றார். நிகழ்ச்சியின் இறுதியில் கர்நாடக பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ந.முத்துமணி ஏற்புரை வழங்கினார்.
Home மாவட்டங்கள் பெங்களூர் தமிழர்கள் கல்வி பொருளாதாரத்தில் உயர வேண்டும்: டாக்டர் ராம்பிரகாஷ் மனோகர் ஐஏஎஸ்