தமிழ்நாடு – நாகாலாந்து ஆட்டம் டிராவில் முடிந்தது

பெங்​களூரு, அக். 29- ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு – நாகாலாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் பெங்​களூரு​வில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழ்​நாடு அணி 115 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 512 ரன்​கள் குவித்து டிக்​ளேர் செய்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 201 ரன்​களும், விமல் குமார் 189 ரன்​களும் விளாசினர். இதையடுத்து விளை​யாடிய நாகாலாந்து 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 127 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 365 ரன்​கள் எடுத்​தது. தேகா நிஸ்​சல் 161 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 115 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய நாகாலாந்து அணி 157.4 ஓவர்​களில் 446 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. தேகா நிஸ்​சல் 175 ரன்​களும், இம்​லிவதி லெம்​தூர் 146 ரன்​களும் சேர்த்து ஆட்​ட​மிழந்​தனர். தமிழ்​நாடு அணி தரப்​பில் குர்​ஜப்​னீத் சிங் 5, சந்​திரசேகர் 3 விக்​கெட்​களை வீழ்த்​தினர். நாகாலாந்து அணி இன்​னிங்ஸ் முடிவடைந்​ததும் ஆட்​டத்தை டிரா​வில் முடித்​துக்​கொள்ள இரு அணி​களின் கேப்​டன்​களும் சம்​மதம் தெரி​வித்​தனர். முதல் இன்​னிங்​ஸில் முன்​னிலை பெற்​றதன் மூலம் தமிழ்​நாடு அணிக்கு 3 புள்​ளி​கள்​ வழங்​கப்​பட்​டது. பெங்​கால் வெற்றி: பெங்​கால் – குஜ​ராத் அணி​கள் இடையி​லான போட்டி கொல்​கத்​தா​வில் நடை​பெற்​றது. கடைசி நாளான நேற்று 327 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த குஜ​ராத் அணி 45.5 ஓவர்​களில் 185 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான உர்​வில் படேல் 124 பந்​துகளில் 16 பவுண்​டரி​களு​டன் 109 ரன்​கள் விளாசி ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். அவருக்கு அடுத்​த​படி​யாக ஜெய்​மீத் படேல் 45, ஆர்யா தேசாய் 13 ரன்​கள் சேர்த்​தனர். 6 பேட்​ஸ்​மேன்​கள் டக் அவுட் ஆனார்​கள். பெங்​கால் அணி தரப்​பில் முகமது ஷமி 10 ஓவர்​களை வீசி ஒரு மெய்​ட​னுடன் 38 ரன்​களை வழங்கி 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். முதல்தர கிரிக்​கெட் போட்​டி​யில் முகமது ஷமி 4 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் 5 விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார். ஷாபாஷ் அகமது 3 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். 141 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற பெங்​கால் அணி முழு​மை​யாக 6 புள்​ளி​களை பெற்​றது.
அந்த அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது.