
சிலப்பதர், ஜன. 29- அசாம் மாநிலம் டகுகானா மற்றும் சிலப்பதரில் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி தனது 4-வது ஆட்டத்தில் நேற்று மேற்கு வங்கத்துடன் மோதியது. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. தமிழ்நாடு அணி தரப்பில் 61-வது நிமிடத்தில் நந்த குமார் அனந்தராஜ் கோல் அடித்தார். மேற்கு வங்கம் அணி தரப்பில் 81-வது நிமிடத்தில் சுஜித் சாது தலையால் முட்டி கோல் அடித்தார். 4 ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் மேற்கு வங்க அணி 10 புள்ளிகளுடன் முத லிடத்தில் உள்ளது. தமிழ்நாடு அணி 7 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை (30-ம் தேதி) உத்தராகண்ட் அணியுடன் மோதுகிறது



















