Home மாவட்டங்கள் பெங்களூர் தர்ஷன் புத்தகம் படிப்பதில் ஆர்வம்: பவித்ரா கவுடா சுயசரிதை எழுதுகிறார்

தர்ஷன் புத்தகம் படிப்பதில் ஆர்வம்: பவித்ரா கவுடா சுயசரிதை எழுதுகிறார்

பெங்களூரு: ஜூன் 12-
திரையுலகையே உலுக்கிய சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல கன்னட நடிகர் தர்சன் தற்போது சிறையில் புத்தகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில், இந்த வழக்கின் முதல் குற்றவாளியானபவித்ரா கவுடா சிறையில் தனது சுயசரிதையை எழுதத் தொடங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் தர்சன், அங்கு நேரத்தை போக்குவதற்காக புத்தகங்களை படிக்கத் தொடங்கியுள்ளார். இதர கைதிகளுடன் ஒரே பாராக்கில் அடைக்கப்பட்டுள்ள அவர், வாரம் ஒன்றுக்கு 2 முதல் 3 புத்தகங்கள் வரை படித்து வருவதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், சிறையில் இருக்கும் பவித்ரா கவுடா தீவிரமாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் தனது சொந்த வாழ்க்கை வரலாற்றை (சுயசரிதை) எழுதி வருவதாக கூறப்படுகிறது. நடிகர் தர்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் முதன்முதலில் கைது செய்யப்பட்டு தற்போது இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் 11-ந் தேதி, மைசூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து நடிகர் தர்சனை அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸார் கைது செய்தனர். அதற்கு முன்னதாக, ஜூன் 7-ந் தேதி சித்ரதுர்காவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரேணுகாசாமி, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு ஷெட்டில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதான மற்ற குற்றவாளிகள் நடிகர் தர்சனின் பெயரை வெளியிட்டதை அடுத்து தர்சன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சிறையில் இருந்த தர்சன் மற்றும் அவரது கூட்டாளிகள் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியே வந்தனர். ஆனால், இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தர்சனின் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் தர்சன் உட்பட 7 குற்றவாளிகளும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.