Home செய்திகள் தேசிய செய்திகள் திமுக, விசிக தொடர்ந்த வழக்குகள் முடித்துவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

திமுக, விசிக தொடர்ந்த வழக்குகள் முடித்துவைப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி, ஜூலை 17- தமிழகத்​தில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணியை (எஸ்​ஐஆர்) நடை​முறைப்​படுத்​தக் கூடாது என்று திமுக, விசிக, கம்​யூனிஸ்ட் உள்​ளிட்ட கட்​சிகள் சார்​பில், உச்ச நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வழக்​கு​கள் முடித்து வைக்​கப்​பட்​டன. நாடு முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை நடை​முறைப்​படுத்த இந்​திய தேர்​தல் ஆணை​யம் முடிவு செய்​தது. அதன்​படி, பிஹாரைத் தொடர்ந்​து, தமிழ்​நாடு, கேரளா, மேற்​கு​வங்​கம் உள்​ளிட்ட மாநிலங்​களில் தொடங்​கப்​பட்​டன. ஆனால், சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கும் சூழலில் அவசர அவசர​மாக எஸ்​ஐஆர் நடை​முறையை மேற்​கொள்​ளக் ​கூ​டாது, இதை செயல்​படுத்​து​வதற்கு தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதி​காரம் இல்லை என்று கூறி, திமுக, விசிக, கம்​யூனிஸ்ட்​கள், காங்​கிரஸ் உள்பட தமிழகத்​தைச் சேர்ந்த பல்​வேறு அரசி​யல் கட்​சிகள் உச்ச நீதி​மன்​றத்​தில் கடந்த 2025-ம் ஆண்டு நவம்​பரில் வழக்கு தொடுத்​தன. இந்த வழக்​கு​கள், உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, தமிழகத்​தைச் சேர்ந்த அரசி​யல் கட்​சிகள் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர்​கள், அரசி​யலமைப்​புச் சட்​டம் தந்த அதி​காரங்​களை மீறி தேர்​தல் ஆணை​யம் செயல்​படு​வ​தா​வும், தகுதி உள்​ளவர்​கள் நீக்​கப்​படு​வதற்​கும், தகு​தி​யற்​றோர் சேர்க்​கப்​படு​வதற்​கும் ஏது​வான வகை​யில், இந்த நடை​முறை அமைந்​துள்​ள​தாக வாதிடப்​பட்​டது. மேலும், தமிழகத்​தில் லட்​சக்​கணக்​கான வாக்​காளர்​கள் தங்​களது வாக்​குரிமையை இழக்​கும் அபா​யம் உள்​ள​தால், தமிழகத்​தில் எஸ்​ஐஆர் நடவடிக்​கைக்கு தடை விதிக்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தப்​பட்​டது. ஆனால், உச்ச நீதி​மன்​றம், எஸ்​ஐஆர் நடவடிக்​கையை மேற்​கொள்ள தடை விதிக்​காததோடு, இதனால் தகு​தி​யுள்ள நபர்​கள் வாக்​குரிமையை இழக்​கும்​பட்​சத்​தில் அவர்​கள் நீதி​மன்​றத்தை அணுகலாம் என்​றும், வாக்​காளர் பட்​டியலில் இடம்​பெற ஆதார் அட்​டையை ஒரு கூடு​தல் ஆவண​மாக எடுத்​துக்​கொள்ள வேண்​டும் என்​றும் உத்​தர​விட்​டது.