திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்

திருப்பதி: நவம்பர் 9-
திருப்பதியில் சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க நேற்றைய தினம் (நவம்பர் 8-ஆம் தேதி) 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, சிலாதோரணம் வரை வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் நவம்பர் 8-ஆம் தேதியான நேற்று மொத்தம் 80,560 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 35,195 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.22 கோடியாகும். சர்வ தரிசனத்தில் சுவாமி தரிசனத்தில் 24 மணி நேரம் ஆனது. வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அனைத்து காத்திருப்பு அறைகளும் நிரம்பி, சிலாதோரணம் வரை வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கு 5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.