தீவிரவாம் குறித்து இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை

டெல் அவிவ்: பிப்ரவரி 26-
‘‘தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது ’’ என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார்.பிரதமர் மோடி 2 நாள் பயண​மாக நேற்று இஸ்​ரேல் சென்​றார். டெல் அவிவ் விமான நிலை​யத்​தில் பிரதமர் மோடியை இஸ்​ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்​யாகு கட்​டியணைத்து உற்​சாக​மாக வரவேற்​றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்​களை​யும் ராணுவ பேண்ட் குழு​வினர் இசைத்​தனர். பின்​னர், நாடாளு​மன்​றத்​துக்கு இரு​வரும் சென்​றனர்.
இஸ்​ரேல் நாடாளு​மன்​றம் ‘நெசட்​டில்’ பிரதமர் மோடி சிறப்​புரை​யாற்​றி​னார். அவர் இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் நுழைந்த போது, மோடி.. மோடி என இஸ்​ரேல் எம்​.பி.க்​கள் உற்​சாக​மாக கோஷம் எழுப்பி வரவேற்​றனர்.
சகோதர நாடு​கள்: இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் நெதன்​யாகு பேசுகை​யில், ‘‘இஸ்​ரேலின் சிறந்த நட்பு நாடு இந்​தி​யா. இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் சகோதர நாடு​கள். பிரதமர் மோடி இஸ்​ரேல் வந்​துள்​ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது. இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் தங்​கள் உறவை வலுப்​படுத்தி வரு​கின்​றன. மோடியைக் கட்​டிப்​பிடித்து வரவேற்​பது உண்​மை​யிலேயே மிகச் சிறப்​பானது. இரு நாடு​கள் இடையே​யான வர்த்​தகம் இரு மடங்கு அதி​கரித்​துள்​ளது. ஒத்​துழைப்பு 3 மடங்கு அதி​கரித்​துள்​ளது. புரிதல் 4 மடங்கு அதி​கரித்​துள்​ளது. இஸ்​ரேலுக்கு ஆதர​வாக பிரதமர் மோடி உள்​ளார். இந்​தி​யா​வும் இஸ்​ரேலும் பல நல்ல விஷ​யங்​களை பகிர்ந்து கொள்​கின்​றன. யூதர்​களுக்கு இந்​தி​யா​வில் வரவேற்பு அளிக்​கப்​படு​கிறது. இந்​தியா சக்​தி​வாய்ந்த நாடு’’ என்​றார். இஸ்​ரேல் நாடாளு​மன்​றத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: தீவிர​வாதத்தை எது​வும் நியாயப்​படுத்த முடி​யாது. அக்​டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்​திய தாக்​குதலில் உங்​கள் வேதனையை உணர்கிறேன். மும்பை தீவிர​வாத தாக்​குதலும், இஸ்​ரேலில் நடை​பெற்ற தீவிர​வாத தாக்​குதலும் ஒன்​று​தான். பொது​மக்​களை கொல்​வதை நியாப்​படுத்த முடி​யாது. தீவிர​வாதம் அமை​தி​யைக் கெடுக்​கிறது. சமூகத்தை அழிப்​பது​தான் தீவிர​வாதத்​தின் நோக்​கம். தீவிர​வாதத்​தில் இரட்டை நிலை இருக்க முடி​யாது. தீவிர​வாத விஷ​யத்​தில் இஸ்​ரேலுக்கு ஆதர​வாக இந்​தியா உள்​ளது. இப்​பகு​தி​யில் நிலை​யான அமைதி நிலவ வேண்​டும் என இந்​தியா விரும்​பு​கிறது.பாலஸ்​தீன பிரச்​சினைக்​குத் தீர்வு காண வேண்​டிய நேரம் வந்​துள்​ளது. அமை​திக்​கான பேச்​சு​வார்த்​தையைத் தொடங்க வேண்​டும் என இந்​தியா வலி​யுறுத்​துகிறது. இந்​தி​யா​வில் யூதர்​கள் அச்​சமின்றி வசிக்​கின்​றனர். இந்​தியா யூதர்​களின் தாய்​நா​டாக உள்​ளது. நமது உறவு ரத்​தம் மற்​றும் தியாகத்​தால் எழுதப்​பட்​டுள்​ளது. தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தத்தை செயல்​படுத்​து​வது குறித்து இந்​தி​யா​வும் – இஸ்​ரேலும் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.