Home செய்திகள் உலக செய்திகள் துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது!

துபாய் சல்லி சல்லியா நொறுங்க போகுது.. அமீரகம் அவசரப்பட்டா அடி தாங்காது!

துபாய், ஏப்ரல் 1- கடந்த சில வாரங்களாக இஸ்ரேல், ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் தற்போது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அமெரிக்க படைகளுக்கு அடைக்கலம் கொடுத்த சில வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில், ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக போரில் ஈடுபட்டால், துபாய் போன்ற முக்கிய நகரங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்று அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பல நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக அமெரிக்க வான் படைத தளங்களுக்கு அனுமதி அளித்து வரும் கத்தார் உள்ளிட்ட சில நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா பகுதியில் உள்ள பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் பதற்றத்தில் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் இந்த சூழ்நிலையில், ஈரானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் நேரடியாக போரில் ஈடுபட்டால், துபாய் போன்ற முக்கிய நகரங்களுக்கு பெரிய ஆபத்து ஏற்படும் என்று அமெரிக்காவின் முன்னணி பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னணி ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர்,” ஐக்கிய அரபு அமீரகம் தற்போது மிக ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நெருங்கிய உறவை பேணுவதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் தன்னைத்தானே ஆபத்துக்குள் தள்ளிக் கொண்டுள்ளது இந்த மோதலில் நேரடியாக ஈடுபடுவது அந்த நாட்டிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஐக்கிய அரபு அமீரகம் போரில் இறங்கும் சூழ்நிலை ஏற்பட்டால், துபாய் மற்றும் அபுதாபி போன்ற முக்கிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.