துபாய் விமான கண்காட்சி

துபாய்:, நவ. 17- 1500 நிறுவனங்கள், ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் பங்கேற்க இருக்கும் துபாய் விமான கண்காட்சி இன்று தொடங்குகிறது.
இந்தியா சார்பில், விமானப்படை மற்றும் பல்வேறு தனியார் நிறுவனத்தினர் பங்கேற்கின்றனர். போக்குவரத்து மற்றும் போர் விமானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, துபாய் விமான கண்காட்சி மிகவும் முக்கியமானது. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும்
இந்த மாபெரும் கண்காட்சியில் உலகம் முழுவதும் இருந்து முன்னணி உற்பத்தியாளர்கள் பங்கேற்பது வழக்கம்.இந்தாண்டு கண்காட்சி,
இன்று 17ம் தேதி தொடங்கி நாளை 18 வரை நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து 1500 விமானம் மற்றும் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றனர். 150 நாடுகளில் இருந்து விமான தொழில் துறையை சேர்ந்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் பார்வையிட வருகின்றனர்