புதுடெல்லி: ஆக. 18-
துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. மிரட்டல் காரணமாக பள்ளியிலிருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, பள்ளி முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். இது குறித்து டெல்லி தீயணைப்புத்துறை கூறுகையில்,
“துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும், அந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கைகளுக்காக போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.













