தென் ஆப்​பிரிக்கா​வுடன் பலப்பரீட்சை: மே.இ.தீவுகளின் அதிரடி எடுபடுமா?

அகம​தா​பாத், பிப். 26- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 8 சுற்​றில் இன்று பிற்​பகல் 3 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இரு முறை சாம்​பிய​னான பவர் ஹிட்​டர்​கள் நிறைந்த மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி, தென் ஆப்​பிரிக்கா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளுமே இது​வரை தோல்​வியை சந்​திக்​க​வில்​லை. மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி சூப்​பர் 8 சுற்​றில் தனது முதல் ஆட்​டத்​தில் 107 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ஜிம்​பாப்வே அணியை தோற்​கடித்து இருந்​தது. மறு​புறம் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் ஆட்​டத்​தில் நடப்பு சாம்பியனான இந்​தி​யாவை 76 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றிருந்​தது. மேற்​கிந்​திய தீவு​கள் அணி​யின் பேட்​டிங் வரிசை அதிக அளவி​லான பவர்​-ஹிட்​டர்​களை கொண்​டது. முதல் பந்​தில் இருந்து தாக்​குதல் ஆட்​டம் தொடுக்​கும் திறன் கொண்ட இவர்​கள், ஆட்​டத்​தின் எந்த ஒரு கட்​டத்​தி​லும் போட்​டி​யின் முடிவை மாற்​றும் திறன் கொண்​ட​வர்​களாக திகழ்கின்றனர். இருப்​பினும் தென் ஆப்​பிரிக்க அணி​யின் பந்து வீச்சு பலமான​தாக உள்​ள​தால் இன்​றைய ஆட்​டம் ரசிகர்​களுக்கு விருந்​தாக அமையக்​கூடும். நடப்பு தொடரில் மார்கோ யான்​சன், கேசவ் மகா​ராஜ், காகிசோ ரபா​டா, லுங்கி நிகிடி ஆகிய பிர​தான பந்து வீச்சாளர்​களை உள்​ளடக்​கிய தென் ஆப்​பிரிக்க அணியானது எதிரணி​யின் பேட்​ஸ்​மேன்​களுக்கு சவால் அளித்து வரு​கிறது. கார்​பின் போஷ், எய்​டன் மார்க்​ரம் ஆகியோ​ரும் பந்​து​வீச்​சில் கைகொடுத்து வரு​கின்​றனர். பேட்​டிங்​கில் டேவிட் மில்​லர், டெவால்ட் பிரே​விஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோர் இந்​திய அணிக்கு எதி​ராக அபார​மான ஆட்​டத்தை வெளிப்​படுத்தி இருந்​தனர். இந்த ஆட்​டத்​தில் தொடக்​கத்​தில் தென் ஆப்​பிரிக்க அணி 20 ரன்களுக்கு 3 விக்​கெட்​களை இழந்​திருந்​தது. ஆனால் டேவிட் மில்​லர் தனது அனுபவத்​தால் அற்​புத​மாக செயல்பட்டு 35 பந்​துகளில் 63 ரன்​களை விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தார். அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய பிரே​விஸ் 45 ரன்களும், இறு​திக்​கட்​டத்​தில் அதிரடி காட்​டிய டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 44 ரன்​களும் விளாசினர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். டாப் ஆர்டர் பேட்​ஸ்​மேன்​களான எய்​டன் மார்க்​ரம், குயிண்​டன் டி காக், ரியான் ரிக்​கெல்​டன் ஆகியோர் மீண்​டும் பார்முக்கு திரும்​புவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யில் ஷிம்​ரன் ஹெட்​மயர் சிறந்த பார்​மில் உள்​ளார்.