தெலங்கானாவை புரட்டி போட்ட கனமழை

ஹைதராபாத்: ஆக. 30 –
தெலங்​கா​னா​வில் கடந்த 4 நாட்​களாக பெய்து வரும் கனமழை​யால் பல மாவட்​டங்​களில் இயல்பு வாழ்க்கை மிக​வும் பாதிக்​கப்​பட்​டுள்​ளது. தெலங்​கானா மாநிலத்​தில் கடந்த 4 நாட்​களாக பெய்து வரும் தொடர் கனமழை​யால், கிருஷ்ணா, கோதாவரி அணை​கள் நிரம்பி வரு​கின்​றன. மேலும் பல ஏரி​கள், குளங்​கள் நீர்​நிலைகள் என அனைத்​தும் நிரம்​பிய​தால் வெள்​ளம் பெருக்​கெடுத்​துள்​ளது.
இதன் காரண​மாக தெலங்​கா​னா​வில் காமாரெட்​டி, நிஜா​மா​பாத், மேதக் ஆகிய மாவட்​டங்​கள் வெள்​ளத்​தால் சூழப்​பட்​டுள்​ளன. இந்த மாவட்​டங்​களில் உள்ள சாலைகள் மிக​வும் பாதிப்பு அடைந்​துள்​ளன. அணைக்​கட்​டு​களின் கரைகள், ஏரிக்​கரைகள் மிக​வும் பாதிப்​படைந்​துள்​ளன. நிர்​மல், ஆதிலா​பாத், குமரம்​பீம், யாதாத்ரி புவனகிரி, கம்​மம், சிரிசில்லா ஆகிய மாவட்​டங்​களி​லும் பலத்த மழை பெய்து வரு​வ​தால் அங்​கும் மக்​களின் இயல்பு வாழ்க்கை பெரு​மள​வில் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.
இந்​நிலை​யில், தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்​டி, அதி​காரி​களு​டன் இணைந்து வெள்​ளம் பாதித்த இடங்​களை விமானத்​தில் பறந்​த​படி ஆய்வு செய்​தார். மொத்​தம் 794 இடங்​களில் 1,039 கி.மீ தூரம் வரை சாலைகள் மிக​வும் நாசமடைந்து போக்​கு​வரத்து பாதிப்​படைந்​துள்​ளது. கன மழைக்கு இது​வரை 2 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். பல கால்​நடைகள் வெள்​ளத்​தில் அடித்து செல்​லப்​பட்​டுள்​ளன.
தொடர் மழை​யால் மின் இணைப்​பும் துண்​டிக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய நெடுஞ்​சாலை எண் 44-ல் சாலைகள் துண்​டிக்​கப்​பட்​டுள்​ள​தால் லாரி​கள், கண்​டெய்​னர்​கள், பெட்​ரோல், டீசல் டேங்​கர்​கள் அங்​கேயே நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.
கன மழை​யால் தென் மத்​திய ரயில்வே மண்​டலம், பல ரயில்​களை ரத்து செய்​துள்​ள​தாக அறி​வித்​துள்​ளது. மேலும் பல ரயில்​கள் மாற்​றுப் பாதைகளில் திருப்பி விடப்​பட்​டுள்​ளன. கனமழைக்கு நெல், பருத்​தி, வாழை, தக்​காளி, மிள​காய், மஞ்​சள் ஆகிய பயிர்​கள் மூழ்கி விட்​டன. பல கிராமங்​களில் போக்​கு​வரத்து துண்​டிக்​கப்​பட்டு விட்​ட​தால் அங்​குள்ள மக்​களுக்கு அரசு தரப்​பில் ட்ரோன்​கள் மூலம் உணவு பொட்​டலங்​கள், தண்​ணீர் பாட்​டில்​கள், மருந்​துகள் ஆகியவை வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. நேற்​றும் மழை பெய்​த​தால், பள்​ளி, கல்​லூரி​களுக்கு பல மாவட்​டங்​களில் விடு​முறை விடப்​பட்​டது.