தெலுங்கானா இன்ஜினியரை சுட்டு கொன்ற அமெரிக்க போலீஸ்

வாஷிங்டன்: செப். 19-
தெலுங்கானாவை சேர்ந்த 29 வயது நிரம்பிய சாப்ட்வேர் இன்ஜினியர் முகமது நிஜாமுதீன் அமெரிக்காவில் தங்கி பணியாற்றி வந்தார். தற்போது அவர் அமெரிக்க போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கனாா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஹஸ்னுதீன். இவரது மகன் பெயர் முகமது நிஜாமுதீன்.
இவருக்கு வயது 29. இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தங்கி சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார்.
இவர் அமெரிக்காவில் எம்எஸ் படிப்பை முடித்தார். அதன்பிறகு அங்கேயே சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். நண்பர்களுடன் ஒரு அறையில் தங்கி பணிக்கு சென்று வந்தார்.
நண்பனுடன் சண்டை இந்நிலையில் தான் கடந்த 3ம் தேதி முகமது நிஜாமுதீனுக்கும், அவரது அறையில் தங்கியிருக்கும் நண்பருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே முகமது நிஜாமுதீன் கத்தியை எடுத்து தனது நண்பரை குத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
போலீஸ் துப்பாக்கிச்சூடு இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்டா கிளாரா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். கத்தியை காட்டி போலீசாரையும் மிரட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இதில் குண்டு காயமடைந்த முகமது நிஜாமுதீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்