கொச்சி: ஆகஸ்ட் 5-
எதை கொடுத்தாலும் அமைதியாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்கக் கூடாது என தேசிய விருதுக் குழுவுக்கு நடிகை ஊர்வசி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை சார்பில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்), சிறந்த இசைக்கான விருது ஜி.வி.பிரகாஷ் குமார் (வாத்தி), சிறந்த கதை வசனத்துக்கான விருது ராம் குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் படமாக பார்க்கிங் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
‘உள்ளொழுக்கு’ படத்துக்காக சிறந்த துணை நடிகை விருது நடிகை ஊர்வசிக்கு அறிவிக்கப்பட்டது. ‘பூக்காலம்’ படத்தில் நடித்த விஜயராகவனுக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறித்து சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் ஊர்வசி கூறியிருப்பதாவது: “அவர்களால் எப்படி ‘ஆடுஜீவிதம்’ படத்தை புறக்கணிக்க முடிந்தது? நஜீபின் வாழ்க்கையையும், அவரது துயரங்களையும் வெளிப்படுத்த, நேரத்தையும் உழைப்பையும் கொட்டி, உடல் ரீதியான மாற்றத்தை ஒரு நடிகர் (ப்ரித்விராஜ்) அனுபவித்திருக்கிறார். இந்த புறக்கணிப்புக்கு ‘எம்புரான்’ படம்தான் காரணம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். விருதுகள் அரசியலாக மாறக் கூடாது.துணை கதாபாத்திரங்களுக்கான விருதுக்கு பிரதான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், உண்மையான துணை நடிகர்களுக்கு என்ன நடக்கும்? முன்னணி வேடமா அல்லது துணை வேடமா என்பதை தீர்மானிக்க நடிப்பை எவ்வாறு அளந்தார்கள்? 2005-ல் வெளியான ‘அச்சுவிண்டே அம்மா’ படத்துக்காகவும் ‘சிறந்த துணை நடிகை எனக்கு வழங்கப்பட்டது.















