
முசோரி: ஜூன் 17-
டெல்லியைச் சேர்ந்த ராதா காயத்ரி (27) குருகிராமில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் புனே நகரில் ஐடி துறையில் பணிபுரியும் தனது கணவர் சவும்யா ஸ்ரீசரனுடன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
டெல்லியிலிருந்து ரிஷிகேஷ் சென்ற இத்தம்பதி பிறகு அங்கிருந்து கடந்த 14ம் தேதி இரவு முசோரி வந்துள்ளனர். திப்ரிதார் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கிய இத்தம்பதியினர் இரவில் மது அருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் காலையில் ஸ்ரீசரண் எழுந்து பார்த்தபோது, காயத்ரி ஆடைகளின்றி, எவ்வித அசைவும் இல்லாமல், தரையில் சிறுநீர் வெள்ளத்தில் கிடந்ததாகவும் அவரது மூக்கிலிருந்து ரத்தம் வழிந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவலின் பேரில் முசோரி போலீஸார் ஆம்புலன்ஸுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆம்புலன்ஸில் இருந்த மருந்தாளுநர், காயத்ரியை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.


















