Home செய்திகள் தேசிய செய்திகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு

புதுடெல்லி: ஏப்ரல் 29 –
மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, கேரளா, அசாம் மற்​றும் புதுச்​சேரி யூனியன் பிரதேசத்​தின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வெளி​யாகிறது.அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய 3 சட்​டப்​பேர​வை​களுக்​கான தேர்​தல் ஒரே கட்​ட​மாக ஏப்​ரல் 9-ம் தேதி முடிந்​தது. தமிழக சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக கடந்த 23-ம் தேதி தேர்​தல் முடிந்​தது.மேற்​கு​வங்​கத்​தில் 2 கட்​ட​மாக தேர்​தல் நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டது. இதன்​படி முதல்​கட்ட தேர்​தல் 23-ல் முடிந்​தது. இன்று 2-ம் கட்ட தேர்​தல் முடிவடைகிறது. இத்​துடன் இன்று மாலை 6 மணி​யுடன் 5 மாநில தேர்​தல் முடிவுக்கு வரு​கிறது.இதனால், அனை​வரின் பார்​வை​யும் இப்​போது தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக்​கணிப்​பு​களின் மீது திரும்​பி​யுள்​ளது. தேர்​தல் ஆணை​யத்​தின் வழி​காட்​டு​தலின்​படி, இறு​திக்​கட்ட வாக்​குப்​ப​திவு முடிந்து 30 நிமிடங்​களுக்​குப் பிறகு​தான் கருத்​துக்​கணிப்பு முடிவு​களை வெளி​யிட வேண்​டும்.
இதன்​படி, தமிழ்​நாடு, கேரளா, புதுச்​சேரி, மேற்கு வங்​கம், அசாம் ஆகிய 5 மாநிலங்​களுக்​கான தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​கணிப்பு முடிவு​கள் இன்று மாலை 6.30 மணிக்கு மேல் வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.மேற்கு வங்​கத்​தில் ஏப்​ரல் 23-ம் தேதி நடந்த முதற்​கட்​டத் தேர்​தலில் 152 தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு நடை​பெற்​றது. பல பகு​தி​களில் கிட்​டத்​தட்ட 93% என்ற சாதனை அளவி​லான வாக்​கு​கள் பதி​வாகின. இது​போல தமிழ்​நாட்​டில் 85.1%, அசாமில் 85.5%, கேரளா​வில் சுமார் 78% புதுச்​சேரி​யில் முன்​னெப்​போதும் இல்​லாத வகை​யில் 89.87% வாக்​கு​கள் பதி​வாகி​யுள்​ளன.தேர்​தல் நடை​பெற்ற அனைத்து மாநிலங்​களி​லும் வாக்கு எண்​ணிக்​கை மே 4-ம்​ தேதி நடை​பெற உள்​ளது.