
சென்னை:பிப்ரவரி 27-
சென்னையில் தொடர்ந்து நான்கு வர்த்தக நாட்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிவடைந்து இருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன என்பதையும், வரும் நாட்களில் எப்படி இருக்க போகிறது என்பதையும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சென்னையில் கடந்த சனிக்கிழமை அதாவது 21ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரையிலான நான்கு வர்த்தக நாட்களில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்தது. இனி விலை ஏறுமுகம் தான் என மக்கள் எண்ணிய நிலையில் நேற்று ,இன்று என தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று ஒரு கிராம் 14, 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுவே இன்றைய தினம் சற்றே விலை குறைந்து 14 , 900 ரூபாயாக விற்கப்படுகிறது.
அதாவது தங்கம் விலை ஒரு கிராமுக்கு 20 ரூபாய் விலை சரிந்திருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது தங்கம் நேற்றைய தினம் 1,19,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது அதுவே இன்றைய தினம் 160 ரூபாய் விலை குறைந்து 1,19,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக தங்கம் விலை குறைந்திருந்தாலும் பெரிய அளவில் குறையவில்லை. நேற்று 10 ரூபாய் ம் இன்று 20 ரூபாய் என ஆபரண தங்கம் விலை ஒரு கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து இருக்கிறது. ஒரு சவரன் என பார்க்கும்போது 240 ரூபாய் சரிந்து இருக்கிறது. சென்னையில் இன்றைய தினம் 24 கேரட் தங்கமும் கிராம் 22 ரூபாய் குறைந்து 16,255 ரூபாயாகவும் ஒரு சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 1,30,040 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் விலை குறைந்து 12,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 120 ரூபாய் விலை குறைந்து 1,02,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை பொருத்தவரை மாற்றமில்லை, தொடர்ந்து இரண்டு நாட்களாக வெள்ளியின் விலை மாறாமல் ஒரு கிராம் 295 ரூபாய்க்கும், ஒருகிலோ 2.95 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி மாதம் முழுவதுமே இந்தியாவில் தங்கம், வெள்ளி விலையில் பெரிய அளவிலான மாற்றம் ஏற்படவில்லை. ஜனவரி மாத இறுதியில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1, 33,000 ரூபாய் என்று வரலாற்று உச்சத்தையும் ஒரு கிலோ வெள்ளி விலை 4.25 லட்சம் ரூபாய் என இதுவரை இல்லாத உச்சபட்ச விலையையும் எட்டின. ஆனால் அதன் பிறகு படிப்படியாக விலைகள் சரிய தொடங்கின. பிப்ரவரி மாதம் முழுவதுமே தங்கம் விலை பெரிய அளவில் உயரவும் இல்லை பெரிய அளவில் சரியவுமில்லை ஒரு குறிப்பிட்ட விலை வரம்பிற்கு உள்ளாகவே ஏறுவதும் இறங்குவதுமாக இருந்து வருகிறது















