நக்சல்கள் ஒழிக்கப்படும் வரை மத்திய அரசு ஓயாது: அமித்ஷா

புதுடெல்லி: செப். 4:-
அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும் வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​தார். சத்​தீஸ்​கர் மாநிலம் கர்​ரேகுட்டா மலை​யில் சிஆர்​பிஎப். வீரர்​கள், சத்​தீஸ்​கர் மாநில காவல்​துறை, மாவட்ட ரிசர்வ் போலீஸ் படை மற்​றும் கோப்ரா படை​யினர் இணைந்து நடத்​திய ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்​கைக்கு அமைச்​சர் அமித் ஷா பாராட்டு தெரி​வித்​துள்​ளார்.
இது தொடர்​பாக நடை​பெற்ற பாராட்டு விழா​வில் அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட்​டின் போது வீரர்​கள் வெளிப்​படுத்​திய துணிச்​சலும் வீர​மும் நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கை​களின் வரலாற்​றில் ஒரு பொன்​னான அத்​தி​யாய​மாக நினை​வு​கூரப்​படும். தொடர்ச்​சி​யாக தீவிர​வா​தி​களின் அச்​சுறுத்​தல்​கள் இருந்​த​போ​தி​லும்,
பாது​காப்​புப் படை​யினர் மிகுந்த மன உறு​தி​யுடன் நடவடிக்​கையை மேற்​கொண்டு பெரிய நக்​சல் தள முகாமை வெற்​றிகர​மாக அழித்​தனர். கர்​ரேகுட்டா மலை​யில் நிறு​வப்​பட்ட நக்​சல்​களின் கிடங்​கு, விநி​யோகச் சங்​கி​லியை சத்​தீஸ்​கர் காவல்​துறை, சிஆர்​பிஎஃப், டிஆர்ஜி மற்​றும் கோப்ரா பணி​யாளர்​கள் வீரத்​துடன் அழித்​தது பாராட்​டுக்​குரியது.
நாட்​டின் வளர்ச்​சி​யடை​யாத சில பகு​தி​களில் நக்​சல்​கள் கடுமை​யான சேதத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர். பள்​ளி​கள், மருத்​து​வ​மனை​கள் மற்​றும் அரசு நலத்​திட்​டங்​களை சீர்​குலைந்​துள்​ளனர். மேலும் அரசு நலத்​திட்​டங்​களுக்கு இடையூறு விளை​வித்​துள்​ளனர். தொடர்ச்​சி​யான நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கைகள் காரண​மாக, பசுப​தி​நாத் முதல் திருப்​பதி வரையி​லான பகு​தி​யில் உள்ள சுமார் 6.5 கோடி மக்​களின் வாழ்க்​கை​யில் ஒரு ‘‘பு​திய சூரிய உதயம்’’ ஏற்​பட்​டுள்​ளது. நக்​சல் எதிர்ப்பு நடவடிக்​கை​களின் போது கடுமை​யான காயமடைந்த பாது​காப்​புப் பணி​யாளர்​களை ஆதரிக்க பிரதமர் மோடி தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு தேவை​யான அனைத்து நடவடிக்​கைகளை​யும் எடுத்து வரு​கிறது.அவர்​களின் வாழ்க்கை எளி​தாக்​கப்​படு​வதை அரசு உறுதி செய்​யும். வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நாட்​டிலிருந்து நக்​சல்​வாதத்தை ஒழிக்க அரசு உறுதி பூண்​டுள்​ளது. அனைத்து நக்​சல்​களும் ஒழிக்​கப்​படும்.
வரை பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசு ஓயாது. பிரதமர் மோடி தலை​மையி​லான அரசாங்​கம்,
இந்​தி​யாவை நக்​சல் இல்​லாத நா​டாக மாற்ற உறுதி பூண்​டுள்​ளது என்​பதை தெரி​வித்​துக்​ கொள்​கிறேன். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.