
பெங்களூரு: ஆக. 23:
பெங்களூரு கோரமங்கலா வாட்டர் டேங்க் சந்திப்பு அருகே, நேற்று இரவு இயங்கிக்கொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றி எறிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
நேற்று இரவு சுமார் 11:30 மணியளவில் கார் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அதன் என்ஜின் பகுதியில் எதிர்பாராதவிதமாக தீ பிடித்துள்ளது. சில நிமிடங்களிலேயே தீ கார் முழுவதும்
பரவி, வாகனம் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.
என்ஜினில் புகையும் தீயும் வருவதைக் கண்டதும், ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியுள்ளார்.
காரில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறி ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, உயிர் தப்பினர். அங்கிருந்த வாகன ஓட்டிகள் தீயை அணைக்கப் போராடினர். இந்த விபத்தின் காரணமாக ஆகரா – சர்ஜாபூர் சாலையில் சிறிது நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கார் தீப்பற்றி எறிந்ததற்கான துல்லியமான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












