
டெல்லி, மே 21- அரசு முறை வெளிநாடுகள் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். UAE, நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி இன்று நாடு திரும்பினார். இந்த 5 நாட்கள் பயணத்தில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கனிமங்கள் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அவர் 5 நாடுகளுக்கான முக்கியத் தலைவர்களையும் சந்தித்து பேசினார்.

















