நாடு முழுக்க சாலை போடும் முறையே மாறப்போகிறது

சென்னை: அக், 23-
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாட்டின் ஒட்டுமொத்த நகராட்சி கழிவுகளையும் 2027ஆம் ஆண்டுக்குள் சாலை அமைப்பதற்குப் பயன்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர், சாலை கட்டுமானப் பணிகளில், ஏற்கனவே 80 லட்சம் டன் நகராட்சி கழிவுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். உதாரணமாக, அகமதாபாத்-புனே நெடுஞ்சாலை கட்டுமானத்தில் 25 லட்சம் டன்னும், மும்பை-டெல்லி நெடுஞ்சாலையில் 40 லட்சம் டன்னும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நகராட்சி கழிவு மூலம் சாலைகள் கால்நடைகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ பிட்யூமன் பயன்படுத்தி ஒரு சாலை அமைக்கப்பட்டதாகவும், இது பெட்ரோலிய பிட்யூமனுடன் ஒப்பிடுகையில் சிறந்தது என மத்திய ஆராய்ச்சி நிறுவனம் சான்றளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நகராட்சி கழிவுகள் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஹைட்ரஜன் தயாரிப்பதற்கான பல ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் வரும் சாலை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), மதுரவாயல் சந்திப்பை சென்னை வெளிவட்டச் சாலை (CORR) உடன் இணைக்கும் 8.14 கி.மீ நீளமுள்ள ஆறு வழி மேம்பாலச் சாலை அமைப்பதற்கான டெண்டர்களை வெளியிட்டுள்ளது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த திட்டம் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மேம்பாலத் திட்டத்திற்கு தோராயமாக ₹1,476.8 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 8.14 கிலோமீட்டர் நீளம் கொண்டதாகவும், ஆறு வழித்தடங்களைக் கொண்டதாகவும் இருக்கும். dtnext தகவலின்படி, இதன் மதிப்பிடப்பட்ட செலவு ₹1,476.8 கோடி ஆகும். இது சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கனரக வாகனப் போக்குவரத்தை எளிதாக்குவதையும், இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் சென்னை துறைமுகம்-மதுரவாயல் மேம்பாலச் சாலையுடன் இந்த புதிய திட்டம் ஒருங்கிணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.