
திருமலை: மார்ச் 2-
சந்திர கிரகணம் நாளை 3ம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கி, மாலை 6.47 மணிக்கு முடிவடைவதால், ஆகம விதிகளின்படி திருப்பதி ஏழுமலையான் கோயில் சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரம் முன்னதாக சாத்தப்பட உள்ளது.
கிரகணம் முழுமையாக நிறைவடைந்த பின்னர், 3ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அதன் பிறகு இரவு 8.30 மணியில் இருந்து சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதனையொட்டி நேற்றும் இன்றும் 2 நாட்களுக்கு சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டது.















