பாட்னா: செப். 24-
பீகார் முதல்வராக நிதிஷ்குமார் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறார். அரசியல் வாழ்க்கையில் 20 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் இப்போது கேள்வி என்னவெனில், கடந்த காலங்களில் அவரது வெற்றிக்கு உதவிய ஃபார்முலா என்ன? இந்த முறையும் அது உதவுமா? என்பதுதான். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (EBC) -36.01% பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) -27.12% பட்டியல் சாதியினர் (SC) -19.65% முற்பட்ட வகுப்பினர் (FC) -15.52% பட்டியல் பழங்குடியினர் (ST) – 1.68% பீகாரில் உள்ள சாதி வாக்குகள் மேற்குறிப்பிட்டவைதான். இதில் உட்பிரிவுகள் இருக்கிறது. அதாவது யாதவர்களும் OBC பிரிவுக்குள் வருவார்கள், அதேபோல குஷ்வாகாவும் OBC பிரிவுக்குள் வருவார்கள். உட்பிரிவின்படி சாதிவாரி வாக்குகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. யாதவர்கள் (OBC) – 14.26% ரவிதாஸ் (SC) – 5.25% குஷ்வாகா (OBC) – 4.21% ஷேக் – இஸ்லாமியர்கள் (OBC/EBC)- 3.82% பிராமணர் (FC) – 3.65% ராஜ்புத் (FC) – 3.45% முஷார் (EBC) – 3.08% குர்மி (OBC) – 2.87% பூமிஹார் (FC) – 2.86% 9 முறை முதலமைச்சர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் முறையாக பீகாரின் முதலமைச்சராக நிதிஷ்குமார் பதவியேற்றார். ஆனால், அவரது பதவிக்காலம் வெறும் 7 நாட்கள் மட்டுமே நீடித்தது. இதனை தொடர்ந்து 2005ம் ஆண்டு பீகாரின் முதல்வராக பதவியேற்ற நிதிஷ்குமார், 2014 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தார். பின்னர் 2015 ஆம் ஆண்டு பீகாரின் முதல்வராக மீண்டும் பதவி ஏற்ற நிதிஷ்குமார், இப்போது வரை முதலமைச்சராக தொடர்ந்து வருகிறார். தொடர்ந்து 9 முறை முதல்வராக நிதிஷ்குமார் நீடித்து வருகிறார். இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் அவர் பயன்படுத்திய ஃபார்முலாதான். சாதி வாக்குகள் பீகார் அரசியலில் புகுந்து விளையாடுகின்றன. அந்த வகையில் சாதி வாக்குகளை மையப்படுத்தி, வியூகம் வகுத்து நிதிஷ்குமார் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் இந்த முறை இந்த வியூகம் கை கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. எனவே 2014 மக்களவை தேர்தலை தனித்து போட்டியிட நிதிஷ்குமார் முடிவெடுத்தார். அந்த முடிவு தவறானது என காலம் உணர்த்துகிறது. தேர்தலில் இவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
எனவே, தோல்விக்கு பொறுப்பேற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வெளிப்படையாக பார்த்தால் இது நியாயமான விஷயமாக தெரியும். ஆனால் இதிலும் ஒரு அரசியல் ஆட்டத்தை நிதிஷ் ஆடினார்















