
பாட்னா: அக்.30-
பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரை ரிமோட் கன்ட்ரோல் மூலம் பாஜக இயக்குகிறது என்று ராகுல் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிஹாரின் முசாபர்பூரில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது: பிஹாரில் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தாலும் உண்மையான அதிகாரம் பாஜகவிடம் உள்ளது. இங்கு நிதிஷ் குமாரின் முகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரிமோட் கன்ட்ரோல் பாஜகவின் கைகளில் உள்ளன.
மிகவும் பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரதமர் முன்னிலையில் மக்களவையில் நான் பேசினேன். து பிரதமர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பாஜக சமூக நீதிக்கு எதிரானது.பிஹாரில் நிதிஷ் குமார் 20 ஆண்டுகள் ஆட்சி செய்த போதும் மக்களுக்கு முன்னேற்றம் மறுக்கப்பட்டுள்ளது. பிஹாரிகளுக்கு எதிர்காலம் இல்லை. நிதிஷ் குமார் தன்னை மிகவும் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்தவராக அடிக்கடி கூறிக்கொள்கிறார். ஆனால் மக்களின் அடிப்படை தேவைகளை அவர் பூர்த்தி செய்யத் தவறிவிட்டார். கடந்த 20 ஆண்டுகளில் பிஹாரில் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்காக அவர் எதுவும் செய்யவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.


















