நியூஸிலாந்து – பாகிஸ்தான் பலப்பரீட்சை

கொழும்பு: பிப்ரவரி 21-
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் இன்று இரவு 7 மணிக்கு நியூஸிலாந்து – பாகிஸ்​தான் அணி​கள் கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நடை​பெறுகிறது.
ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற்று வரு​கிறது. 20 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்த கிரிக்​கெட் திருவிழாவில் லீக் சுற்​றுகள் முடிவடைந்​துள்​ளன. லீக் சுற்றின் முடி​வில் ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, பாகிஸ்​தான், ‘பி’ பிரிவில் ஜிம்​பாப்​வே, இலங்​கை, ‘சி’ பிரி​வில் மேற்கு இந்தியத் தீவு​கள், இங்​கிலாந்​து, ‘டி’ பிரி​வில் தென் ஆப்பிரிக்​கா, நியூஸிலாந்து அணி​கள் 8 அணி​கள் சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறி இருந்​தன. இந்த 8 அணி​களும் குரூப் 1, குரூப் 2 என இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது. இதில் குரூப் 1-ல் இந்​தி​யா, ஜிம்பாப்வே, தென் ஆப்​பிரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடம் பெற்​றுள்​ளன. குரூப் 2-ல் நியூஸிலாந்​து, பாகிஸ்​தான், இங்​கிலாந்​து, இலங்கை ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன.
இதில் ஒவ்​வொரு பிரி​விலும் இடம் பெற்​றுள்ள அணி தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும். புள்​ளி​கள் அடிப்​படை​யில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் அரை இறு​திக்கு முன்​னேறும். இந்​நிலை​யில் சூப்​பர் 8 சுற்று இன்று தொடங்​கு​கிறது. இதன் முதல் ஆட்​டத்​தில் இரவு 7 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 2009-ம் ஆண்டு சாம்​பிய​னான பாகிஸ்தான், நியூஸிலாந்​துடன் மோதுகிறது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்​றி, ஒரு தோல்​வியை பதிவு செய்​திருந்​தது.
தென் ஆப்​பிரிக்​கா​விடம் தோல்வி அடைந்த அந்த அணி, ஆப்​கானிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணி​களை வீழ்த்​தி​யிருந்​தது. டாப் ஆர்​டரில் டிம் ஷெய்​பர்ட், ஃபின் ஆலன் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு வருகின்​றனர். இந்த வகை​யில் இவர்​கள் நக்​குல் பால், வேகம் குறைந்த பவுன்​சர் மற்​றும் லெக் கட்​டர்​களை பாகிஸ்​தான் அணியின் பேட்​டிங் வரிசைக்கு எதி​ராக பயன்​படுத்தி அழுத்​தம் கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும். சுழற்​பந்து வீச்சில் மிட்​செல் சாண்ட்​னர், இஷ் சோதி பலம் சேர்க்​கக்​கூடும். இவர்​களுக்கு பகுதி நேர சுழற்​பந்து வீச்​சாளர்​களான ரச்​சின் ரவீந்​தி​ரா, கிளென் பிலிப்ஸ் உறுதுணையாக இருக்​கக்​கூடும்.
சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்தான் அணி லீக் ஆட்​டங்​களில் நமீபி​யா, நெதர்​லாந்​து, அமெரிக்கா ஆகிய அணி​களை வீழ்த்​திய நிலை​யில் இந்​தி​யா​விடம் தோல்வி கண்​டிருந்​தது. அந்த அணி தனது லீக் ஆட்டங்களை முழு​மை​யாக இலங்​கை​யில் விளை​யாடி உள்​ள​தால் ஆடு​களத்​தின் தன்​மையை நன்கு அறிந்திருக்கக்​கூடும்.
இந்த வகை​யில் பாகிஸ்​தான் அணி​யின் பந்து வீச்சாளர்கள், குறிப்​பாக சுழற்​பந்து வீச்​சாளர்​கள், மந்தமான ஆடு​களத்​தில் திறம்பட செயல்பட தேவை​யான வேகம் மற்​றும் நீளத்தை அறிந்​து​வைத்​துள்​ளனர். இது சாதக​மான விஷய​மாக பார்க்​கப்​படு​கிறது.