நீக்​கப்​படு​கிறாரா சல்​மான் அலி?

கராச்சி:, மார்ச் 1- பாகிஸ்​தான் டி20 கிரிக்​கெட் அணி​யின் கேப்​டன் பதவியி​லிருந்து சல்​மான் அலி ஆகா நீக்​கப்​படு​வ​தாக செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​தி​யா, இலங்கை ஆகிய நாடு​களில் தற்​போது நடை​பெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி பங்​கேற்று விளை​யாடி வரு​கிறது. இந்​நிலை​யில் இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்​தான் அணி​யின் செயல்​பாடு​கள் திருப்தி அளிக்​க​வில்லை என்று தெரி​கிறது. இதனால் பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத் தலை​வர் மோஹ்சின் நக்வி அணித் தலைமை மீது அதிருப்தி கொண்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. இதைத் தொடர்ந்து கேப்​டன் பதவியி​லிருந்து சல்​மான் அலி ஆகா விரை​வில் நீக்​கப்​படு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரிய வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இதுதொடர்​பாக பாகிஸ்​தான் அணி​யின் தலை​மைப் பயிற்​சி​யாளர் மைக் ஹெசனுடன், மோஹ்சின் நக்வி ஆலோ​சனை நடத்​தி​யுள்​ள​தாக​வும் தெரி​கிறது. அது​மட்​டுமல்​லால் அணி​யின் மூத்த வீரர்​களாக உள்ள பாபர் அசம், உஸ்​மான் கான் ஆகியோ​ரும் டி20 அணியி​லிருந்து நீக்​கப்​படு​வார்​கள் என்​றும் அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. மேலும், புதிய கேப்​டன் பதவிக்கு ஷாகீன் ஷா அப்​ரிடி, ஷதப் கான் ஆகியோரது பெயர்​களை மோஹ்சின் நக்வி பரிசீலித்து வரு​வ​தாக​வும் தெரி​கிறது. நவீன டி20 கிரிக்​கெட் வடிவத்​துக்கு ஏற்ப அணி​யில் இளம் வீரர்​களை இடம்​பெறச் செய்து அணியை நல்​ல​முறை​யில் கட்​டமைப்​பது அவசி​யம் என்று நக்​வி​யிடம், மைக் ஹெசன் தெரி​வித்​துள்​ள​தாக அந்த வட்​டாரங்​கள் தெரி​வித்​தன.