
வாஷிங்டன், ஆகஸ்ட் 21- உலகின் மிகவும் கனிவான, மனிதாபிமானம் கொண்ட நீதிபதி என்று பெயர் பெற்றவர் பிராங்க் கேப்ரியோ. வழக்குகளில் சிக்கி நீதிமன்றம் வருவோரிடம் சாந்தமாக பேசி அவர்களின் நிலையில் இருந்து யோசித்து தீர்ப்பு வழங்குவார். இன்று இவரது வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பிராங்க் கேப்ரியோ கணைய புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அமெரிக்காவை சேர்ந்தவர் பிராங்க் கேப்ரியோ. இவர் அமெரிக்காவின் ரோட் தீவில் முனிசிபல் நீதிபதியாக இருந்தார். இவர் Caught In Providence’’ என்ற பெயரில் நீதிமன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் புகழ் பெற்றார். இந்நிலையில் தான் பிராங்க் கேப்ரியோ தனது 88 வது வயதில் இன்று காலமானார். கணையப் புற்றுநோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவ சிகிச்சைகளை அவர் எடுத்து வந்த நிலையில் இன்று அவர் காலமானார். இதுதொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிராங்க் கேப்ரியோ ரோட் தீவின் பிராவிடன்ஸில் பிறந்தார். இவர் முனிஷிபல் நீதிபதியாக பணியாற்றினார்.