நீரஜ் சோப்ராவுக்கு லெப்டினன்ட் கர்னல் பதவி

புதுடெல்லி: அக், 23-ஒலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற ஈட்டி எறிதல் வீர​ரான நீரஜ் சோப்​ரா​வுக்கு இந்​திய ராணுவத்​தில் கவுரவ லெப்​டினன்ட் கர்​னல் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது.டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற விழா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங், ராணுவ தலைமை தளபதி உபேந்​திர திவேதி மற்​றும் மூத்த அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். நீரஜ் சோப்ரா கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி, இந்​திய ராணுவத்​தில் நயிப் சுபே​தா​ராக இணைந்​தார். இதன் பின்​னர் 2021-ம் தேதி சுபே​தா​ராக​வும், 2022-ம் ஆண்டு சுபே​தார் மேஜ​ராக​
வும் பதவி உயர்வு பெற்​றார்.1997-ம் ஆண்டு டிசம்​பர் 24-ம் தேதி ஹரி​யானா மாநிலம் பானிப்​பட்​டில் உள்ள காந்த்ரா கிராமத்​தில் பிறந்த நீரஜ் சோப்​ரா, கடந்த 2020-ம் ஆண்டு நடை​பெற்ற டோக்​கியோ ஒலிம்​பிக்​கில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார்.இதன் பின்​னர் 2024-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்​பிக்​கில் வெள்​ளிப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். முன்​ன​தாக 2023-ம் ஆண்டு உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பில் தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார்.ஆசிய விளை​யாட்​டு, காமன்​வெல்த் விளை​யாட்​டு, டயமண்ட் லீக் தொடர்​களி​லும் நீரஜ் சோப்ரா தங்​கப் பதக்​கங்​கள் வென்று குவித்​துள்​ளார். மேலும் ஈட்டி எறிதலில், 90.23 மீட்​டர் எறிந்து இந்​திய விளை​யாட்டு வரலாற்​றில் மைல் கல் சாதனையை​யும் அவர், படைத்​துள்​ளார்.