நேபாளம் மன்னர் குடும்ப சோக கதை தெரியுமா?

காத்மாண்டு: செப். 11-
நேபாளத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய ஒரு சம்பவம் நடைபெற்றது. மன்னராட்சி நடைபெற்று கொண்டு இருந்த போது, மன்னரின் குடும்பத்தை மொத்தமாக இளவரசர் சுட்டுக்கொலை செய்துவிட்டு தானும் துப்பாக்கி குண்டுக்கு இரையானார். நேபாளத்தை அதிர வைத்த வைத்த இந்த சம்பவத்தின் நினைவலைகளை பார்க்கலாம். நேபாளத்தில் ஜென் Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்தால், அந்த நாட்டின் அரசியல் ஒரே நாளில் தலைகீழாக மாறியுள்ளது. பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்த நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை ராணுவம் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. மீண்டும் மன்னராட்சி வேண்டும் என நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி வேண்டும் என்ற கோஷங்களும் எழுந்துள்ள நிலையில், அந்த நாட்டில் 2001ஆம் ஆண்டு மன்னர் குடும்பத்தில் நடைபெற்ற ஒரு துயர சம்பவம் மீண்டும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். நேபாளத்தில் கடந்த 2008ஆம் ஆண்டில் மன்னராட்சி முறை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. 2001ஆம் ஆண்டு நேபாளத்தின் மன்னராக இருந்தவர் பிரேந்திர பீர் பிக்ரம் ஷா தேவ். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த இவர், இந்தியாவின் மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு பள்ளியிலும் பயின்றவர். இவருடைய வளர்ச்சித் திட்டங்கள், சமூக சீர்திருத்தங்கள் காரணமாக நேபாள மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டார். 5 பேரையும் சுட்டு கொன்றார் மன்னர் பிரேந்திரா, ராணி ஐஸ்வர்யாவை 1970ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இளவரசர் தீபேந்திரா, இளவரசி ஸ்ருதி, இளவரசர் நிரஞ்சன் என மூன்று குழந்தைகள். கடந்த 2001 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று, மன்னர் குடும்பத்தினர் காத்மாண்டுவில் உள்ள நாராயண்ஹிட்டி அரண்மனையில் ஒன்று கூடினர்.