
பெங்களூரு: ஜனவரி 29-
பெங்களூருவில் உள்ள தொழிலதிபரின் வீட்டில் ரூ.18 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், வெள்ளி நகைகளை திருடிய நேபாள நாட்டை சேர்ந்ததம்பதி கைது செய்யப்பட்டனர்.கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஏமலூருவை சேர்ந்தவர் ஸ்ரீமந்த் அர்ஜுன் (28). கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் தனது மனைவி ஷீலா (25), தந்தை சிவக்குமார் (58), தாய் ஜெயந்தி (54) ஆகியோருடன் சொந்த வீட்டில் வசிக்கிறார். இவரது வீட்டில் அம்பிகா (34) என்ற சமையல் பணியாளரும், சித்தராமா (37) என்ற ஓட்டுநரும் பணியாற்றி வருகின்றனர்.ஸ்ரீமந்த் அர்ஜுன் தனது வீட்டின் தோட்டப் பணிகளுக்காக தினேஷ் (32), அவரது மனைவி கமலா (25) ஆகிய இருவரை வேலைக்கு நியமித்துள்ளார். இருவரையும் தனது வீட்டின் மேல்மாடியில் தங்க வைத்தார்.இந்நிலையில் ஸ்ரீமந்த் அர்ஜுன் கடந்த 25-ம் தேதி காலை 9.30 மணிக்கு குடும்பத்தினருடன் கோயிலுக்கு சென்றுள்ளார். மதியம் 12.30 மணியளவில் சமையல் பணியாளர் அம்பிகா அவரை தொடர்பு கொண்டு படுக்கை அறையில் உள்ள லாக்கர் கதவுகள் உடைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீமந்த் அர்ஜுன் விரைந்து வந்து பார்த்த போது வீட்டில் ரூ.18 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், ரூ.11.5 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

















