
புதுடெல்லி: பிப்ரவரி 23-
பாஜக மூத்த தலைவர் நிஷிகாந்த் துபே தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதனுடன் வெளியிட்டுள்ள பதிவில், “காங்கிரஸ் பிரதமர் நேரு உலகத்துக்கு நாகின் டான்ஸ் (பாம்பு நடனம்)
காட்டினார், பாஜகவின் பிரதமர் நரேந்திர மோடி உலகத்துக்கு தொழில் நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை எடுத்துக் காட்டுகிறார்.கோபம் வரத்தானே செய்யும்?
இந்தப் படம் 1962ல் அப்போதைய அமெரிக்க அதிபர் கென்னடியின் மனைவி ஜாக்குலினை நேரு வரவேற்றபோது எடுத்தது” என்று கூறியுள்ளார்.















