பாட்னா, நவ. 15- பீகார் சட்டசபை தேர்தல் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட இன்னும் சில கட்சிகள் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்று படுதோல்வியடைந்துள்ளன. பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைக்க உள்ளது. இந்தமுறை முதல்வர் பதவி யாருக்கு? என்பது இன்னும் முடிவாகவில்லை. பாஜக கூட்டணியில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் கடந்த முறையை போல் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராவாரா? இல்லாவிட்டால் பாஜகவுக்கு முதல்வர் பதவியை வைத்து கொள்ளுமா? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் தான் பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வருமாறு: பாஜக கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 20.08 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக நிதிஷ் குமாரின் ஜேடியூ கட்சி 19.25 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்பி கட்சி 4.97 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. மாறாக எதிர்க்கட்சிகளின் மகாகத் பந்தன்’ கூட்டணியில் அதிகபட்சமாக தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 23.00 சதவீதம் ஓட்டுகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 8.71 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ (எம்எல்)(எல்) கட்சி 2.84 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.74 சதவீதம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் 0.60 சதவீத ஓட்டுகளை பெற்றுள்ளது.















