லண்டன், செப். 13- பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணரான டாக்டர் சுஹைல் அஞ்சும், இங்கிலாந்தில் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் நடுவில் விட்டுவிட்டு ஒரு நர்ஸ் உடன் பாலியல் உறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயக்க மருந்து நிபுணரான டாக்டர் சுஹைல் அஞ்சும், கடந்த செப்டம்பர் 16, 2023 அன்று கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டேம்சைட் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கிற்கு அருகில் உள்ள அறையில் ஒரு செவிலியருடன் மோசமான சூழலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கையும் களவுமான பிடிபட்ட மருத்துவர் தற்போது பாகிஸ்தானில் பணிபுரியும் அந்த மருத்துவர் தனது பேண்ட்டை கழற்றி இருந்த நிலையில், அங்கிருந்த நர்ஸ் உள்ளாடைகளுடன் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது இவர்கள் இருவரும் மற்றொரு செவிலியரால் பிடிபட்டதாக லண்டனை தளமாகக் கொண்ட டேப்லாய்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சையை விட்டுவிட்டு நர்ஸ் உடன் உடலுறவு கொள்வதற்காக, பித்தப்பையை அகற்றும் அறுவை சிகிச்சைக்கு இடையிலேயே நோயாளியை அப்படியே விட்டுவிட்டு அஞ்சும் சென்றதாக மான்செஸ்டரில் உள்ள தீர்ப்பாயத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பாத்ரூம் செல்வதாக மயக்க மருந்து செவிலியரிடம் கூறிவிட்டு, மற்றொரு செவிலியருடன் அவர் உடலுறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. டாக்டர் அஞ்சும், நர்ஸ் உடன், ஆபரேஷன் தியேட்டருக்கு அருகில் உள்ள மற்றொரு அறையில் உடலுறவு கொண்டிருந்தபோது, அங்கு, அடுத்த ஆபரேஷனுக்கு தேவையான உபகரணங்களைச் எடுக்கச் சென்ற மற்றொரு நர்ஸ் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். ஒப்புக்கொண்ட மருத்துவர் இதையடுத்து, தீர்ப்பாயத்தில் நடந்த விசாரணையின்போது, அறுவை சிகிச்சையின் போது நோயாளியை விட்டு வெளியேறி, நர்ஸ் உடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் சுஹைல் அஞ்சும் ஒப்புக்கொண்டுள்ளார். தனது மனைவியுடன் சரியான உறவில் இல்லாத காலகட்டத்தில், மன அழுத்தத்தில் இது நடந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். “இந்த விஷயம் எவ்வளவு அவமானகரமானது என்பதை என்னால் வெளிப்படுத்தவே முடியவில்லை. நான் உண்மையிலேயே வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன், என் நடத்தையின் தீவிரத்தை முழுமையாக உணர்கிறேன். இது மீண்டும் நடக்காது என்பதை குழு உறுதி செய்ய விரும்புகிறேன். ஆனால் அது குற்ற உணர்ச்சியையும் சங்கடத்தையும் போக்காது.” என டாக்டர் அஞ்சும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.



















