டெல்லி: செப் .29-
தனி மாநில அந்தஸ்து கோரிய போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தற்போது லடாக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு அடுத்த சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, காஷ்மீர் தனி மாநிலமாகவும், லடாக் பகுதியை சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரித்து மத்திய அரசு அறிவித்தது. விரைவில் லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு அவ்வப்போது கூறி வந்தாலும், 6 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை மாநில அந்தஸ்து வழங்கப்படவில்லை. இது தொடர்பான கோரிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக புறக்கணித்து வருகிறது.
மாநில அந்தஸ்து மட்டுமல்லாது திரிபுரா, அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை போன்று லடாக்கையும் இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 15 நாட்களாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி சூழலியல் ஆர்வலர் சோனம் வாங்க்சுக் உட்பட 10 பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தை கலைத்த போலீசார், அவர்களை கைதும் செய்தனர். இதனையடுத்து புத்த மதத்தை பிரதிபலிக்கும் அமைப்பும், இஸ்லாம் மதத்தை பிரதிபலிக்கும் அமைப்பும் ஒன்று சேர்ந்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன. போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாஜக அலுவலகம், அரசு வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகினர். இதனையடுத்த லடாக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பதற்றம் தணிந்துவிட்டது, போராட்டக்காரர்களை ஒடுக்கிவிட்டோம் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இன்றும் அங்கு அமைதி திரும்பவில்லை.
எனவே, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் 5 அல்லது அதற்கு அதிகமானோர் பொது இடங்களில் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, அனுமதியின்றி ஊர்வலம், பேரணி நடத்தவும் தடை செய்யப்பட்டிருக்கிறது. சரி, அனுமதி பெற்று பேரணி போகலமா? என்று கேட்டால், அனுமதியும் வழங்கப்படாது. தற்போது அவர், ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.















